இதுக்காக தான் மிசா சட்டத்தில் கைதானேன்னு ஸ்டாலின் சொல்லியிருக்கலாமே: அமைச்சர் பாண்டிய ராஜன்

  0
  3
  MK Stalin - Minister Pandiyarajan

  திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

  திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தனது கட்சித் தலைவர் குறித்து இழிவு படுத்துவது போலப் பேசியதாக, திமுக  உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் அமைச்சர் பாண்டிய ராஜனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  minister

  பாண்டிய ராஜனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மு.க ஸ்டாலின் அவரது கட்சி தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். திமுக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அமைச்சர் பாண்டிய ராஜனின் வீட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

  Minister

  திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் பாண்டிய ராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில்’ ஸ்டாலினின் வாழ்க்கையிலேயே முக்கியமான விஷயம் அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது. அவர் கைதானதில் எனக்கு இருந்த சந்தேகம் குறித்துத் தான் நான் பேசினேன். மு.க ஸ்டாலின் இதற்காகத் தான் நான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டேன் என்று சொல்லியிருக்கலாமே. இதற்கு ஏன் திமுக என்னை எதிர்த்து போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். திமுக என்னைப் பற்றி முன் வைக்கும் அனைத்து கருத்துக்களுக்கும் அதிமுக 2 நாட்களில் பதிலளிக்கும் என்று அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.