இதிலும் சென்னை முதலிடம்… எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு!

  0
  1
  corona patient

  தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால்  411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரேநாளில் 102  பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 300க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

  coronavirus updates

  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதாவது சென்னையில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  திண்டுக்கல்லில் 43 பேருக்கும் திருநெல்வேலியில் 36 பேருக்கும், ஈரோட்டில்  32, கோவையில்  29, தேனிமாவட்டத்தில்  21, நாமக்கல் பகுதியில்  21,கரூரில் 20, செங்கல்பட்டு 18, மதுரையில் 15, விழுப்புரத்தில் 13, திருவாரூரில் 12, விருதுநகரில் 11, திருப்பத்தூரில் 10, தூத்துக்குடி 9, சேலம் 8, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகை ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 4 பேருக்கும் திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.