‘இதற்காக’ தான் பிக் பாஸில் கலந்துகொண்டேன்…ஒரு மாதத்திற்கு பிறகு உண்மையை சொன்ன சேரன்

  0
  3
  சேரன்

  சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது.  

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்தவர் இயக்குநர்  சேரன். லாஸ்லியாவை மகளாக நினைத்து சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது.  

  cheran

  பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின், சாக்ஷி, அபிராமி  மற்றும்  வனிதா ஆகியோர் சேரனை சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர்.ஆனால்  லாஸ்லியா – கவின் ஆர்மியினரோ சேரனை தொடர்ந்து குறை சொல்லி, வசைபாடி வருகின்றனர். இருப்பினும் சேரன் அதையெல்லாம் கண்டுகொள்ளாது தனது வேலையை பார்த்து வருகிறார். 

  ttn

  இந்நிலையில் ஃபேஷன் டிசைனர் ஃபைசாகானின் காலண்டருக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் பிக்பாஸ்  சாக்சி அகர்வால் மாடலாக நடித்துள்ளார். இதை சேரன் வெளியிட்டிருந்தார்.  அப்போது செய்தியாளர்களைச்  சந்தித்த அவரிடம் 96, பிரேமம் படங்கள் ஆட்டோகிராஃப் சாயலில் உள்ளதா? என்று கேட்கப்பட்ட போது, அதுமாதிரி எந்த சாயலும் இல்லை. ஒவ்வொரு படமும், அந்த இயக்குநர்களின் சொந்த கற்பனையில் எடுக்கப்படுகிறது. அதற்கெல்லாம் உரிமைகோர முடியாது’ என்றார். 

  ttn

  தொடர்ந்து பேசிய அவர், என்னையும் என் படத்தையும் இளைய தலைமுறையினர்  மறந்து விட்டனர் அதை ஞாபகப்படுத்தவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றேன்’ என்றார்.