இதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை!

  0
  3
  மாதுளை

  மாதுளை பழம் ஊட்டச்சத்து மிக்கது என்று தெரியும்… ஆனால் அதில் என்ன என்ன சத்துக்கள் உள்ளது, அது உடலுக்கு எப்படி நன்மை செய்கிறன என்று தெரியுமா? மாதுளை பழத்தை வைட்டமின்கள், தாதுஉப்புக்களின் சுரங்கம் என்று சொல்வார்கள்… அந்த அளவுக்கு பல ஊட்டச்சத்துக்களை கொண்ட பழம் இது. ஏன் மாதுளை பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்…

  1) ஊட்டச்சத்து நிறைந்தது

  174 கிராம் எடை கொண்ட ஒரு மாதுளையில் 7 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் புரதம், ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி-யில் 30 சதவிகிதம், வைட்டமின் கே-யில் 36 சதவிகிதம், ஃபேலேடில் 16 சதவிகிதம், பொட்டாஷியத்தில் 12 சதவிகிதம் இதில் உள்ளது. இதில் 24 கிராம் அளவுக்கு இனிப்பும் உள்ளது. அது 144 கலோரியைத் தரும். மாதுளையின் சாறு மற்றும் தோளில் Punicalagins என்ற வேதிப் பொருள் உள்ளது. இது மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்படுகிறது. 

  2) செல்களின் வீக்கத்தைத் தவிர்க்கும்!

  மாதுளை வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய், அல்சைமர் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. உடல் எடை குறைய நினைப்பவர்கள் தங்கள் டயட்டில் மாதுளையை சேர்த்துக்கொள்ளலாம். இது செரிமானப் பாதையில் உள்ள செல்கள் வீக்கத்தைத் தடுக்கிறது என்றும் மார்பக, குடல் புற்றுநோய் செற்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

  3) மூட்டு நோயைத் தவிர்க்கிறது!

  செல்களின் வீக்கத்தைக் குறைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தோம். மூட்டு செல்களின் ஏற்படும் வீக்கத்துக்கும் எதிராக இது செயல்படுகிறது. இதனால் மூட்டுப்பகுதியில் ஏற்படக் கூடிய கார்டிலேஜ் பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. எலும்பு மூட்டு தொடர்பான பாதிப்புகளை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.

  4) இதயத்துக்கு இதம் அளிக்கிறது!

  தினமும் 150 கிராம் ஃபிரெஷ் மாதுளை சாறு அருந்திவந்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இது ரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் குறைக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதய வால்வுகள் மற்றும் குழாய்களை உறுதிப்படுத்துகிறது. கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இதயம் மற்றும் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை மருந்து எடுப்பவர்கள் மாதுளை சாறு அதிகம் அருந்த வேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது.

  6) நினைவாற்றலை மேம்படுத்துகிறது!

  மூளையின் நினைவு திறன் குறைதல் பிரச்னை தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மாதுளை சாறு நல்ல பலனை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத் திறன் குறைபாடு உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து மாதுளை சாறு எடுத்து வந்தபோது அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் பார்வை மற்றும் வார்த்தை தொடர்பான தடுமாற்றம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.