இதனால தான் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை… மனம் திறந்த நயன்தாரா! 

  0
  3
  நயன்தாரா

  தமிழ் சினிமாவில் நயன்தாரா எப்போதுமே பரபரப்பு நடிகை தான். ஒரு காதல் தோல்வியையே தாங்கிக் கொள்ளாமல் சினிமாவை விட்டே ஒதுங்கி நின்று கண்களைக் கசக்கும் ஹீரோயின்களுக்கு மத்தியில், சிம்பு, பிரபுதேவா சூறாவளிகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து சாதனை நாயகியாக எப்போதும் வலம் வருகிறார் நயன்தாரா.

  தமிழ் சினிமாவில் நயன்தாரா எப்போதுமே பரபரப்பு நடிகை தான். ஒரு காதல் தோல்வியையே தாங்கிக் கொள்ளாமல் சினிமாவை விட்டே ஒதுங்கி நின்று கண்களைக் கசக்கும் ஹீரோயின்களுக்கு மத்தியில், சிம்பு, பிரபுதேவா சூறாவளிகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து சாதனை நாயகியாக எப்போதும் வலம் வருகிறார் நயன்தாரா. சிம்புவுடன் காதல் சர்ச்சைகள் கிளம்பியதில் இருந்தே பொது விழாக்களுக்கும், தன்னுடைய பட விழாக்களிலும் கலந்துக் கொள்வதைத் தவிர்த்து வருகிறார் நயன். எத்தனை கோடிகள் பட்ஜெட்டில் படமெடுத்தாலும் சரி, சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு பயந்து சேனலுக்கு பேட்டிக் கொடுத்தாலும் சரி… படத்தில் ஒப்பந்தமாகும் போதே நயன் போடுகிற கண்டிஷன்களில் அதிமுக்கியமானது, பட ப்ரோமோஷன் வேலைகளில் கலந்துக் கொள்ள மாட்டேன் என்பது தான்.

  nayanthara

  அரசியல் இப்போது பிள்ளையார் சுழி போட்டு, பதவியில் இருக்கும் உதயநிதி, தங்கள் கட்சி நடத்து சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடி பார்த்தார். இத்தனைக்கும் அந்த படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் எல்லாமே அவர் தான்… ம்ஹூம்.. நயன்தாரா அசைந்து கொடுக்கவேயில்லை. ஒவ்வொரு சேனலுக்கும் சிரிச்சி சிரிச்சி ரஜினியெல்லாம் கூட இறங்கிவந்து பேட்டிக் கொடுக்கிறார் என்று நயன்தாராவிடம் ஒரு முறை கேட்டுப் பார்த்தார்கள்… அப்போ ரஜினி பேட்டியையே போட்டுக்கோங்க… நான் வரமாட்டேன்’ என்பது தான் நயன்தாராவின் பதிலாக இருந்தது.
  விஷுவல் மீடியாவில் இப்படியென்றால், பத்திரிக்கை உலகில் நயன்தாரா சொன்னதாக ஆளாளுக்கு கலந்து கட்டி எழுத ஆரம்பித்தார்கள். சொல்லாததையெல்லாம் எழுதுகிறார்களே என்று ஆரம்பத்தில் வருத்தப்பட்ட நயன், ஒட்டுமொத்தமாக பத்திரிக்கைப் பேட்டிகளையும் தவிர்த்து வந்தார். சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்குப் பேட்டியளித்துள்ள நயன், தான் ஏன் இது போல எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை என்பதற்கான காரணத்தை முதன் முறையாக கூறியுள்ளார். 

  nayanthara

  நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். நான் தனிமையை விரும்பும் ஒருவர். கூட்டம் என்றால் எனக்கு சமாளிப்பது கடினம். பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்துவிடுகிறார்கள். அதனால் வரும் சிக்கல்களை சமாளிப்பது கடினமாக உள்ளது. என்னுடைய வேலை நடிப்பது மட்டும் தான். மற்றதை என் படங்களே பேசும் என்று சொல்லியிருக்கிறார். விஜய்யுடன் பிகிலாக இருந்தாலும் சரி, ரஜினியுடன் தர்பாராக இருந்தாலும் சரி… நயன்தாரா தனி ரகம் தான்.