இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தின் மூலம் சென்னை வந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

  0
  1
  Coronavirus

  மார்ச் 24 இன்டிகோ 6E 2403, ஏர் ஏசியா I5-765 விமானங்களில் சென்னை வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

  statement

  இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உங்களில் யாரேனும் மார்ச் 24 ஆம் தேதி காஅலை 6.05 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு  இண்டிகோ விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா I5-765 விமானங்களில் சென்னை வந்தவர்கள் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். மருத்துவ உதவி அல்லது வேறேதும் உதவி தேவைப்பால் எங்களை தொடர்புகொள்ளவும் என தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள் 044 2538 4520 மற்றும் 044 4612 2300” என குறிப்பிட்டுள்ளது.