இணையத்தில் வைரலாகும் இளைய தளபதி மகளின் லேட்டஸ்ட் போட்டோ!

  0
  11
  திவ்யா ஷாஷா

  இளைய தளபதி விஜயும், அஜித்தும் பொது இடங்களுக்கு தங்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்துவருவது மிகவும் அரிது.

  பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

  விஜய் மகள்

  மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என்று செய்தி வெளியான நிலையில் கொரோனா பாதிப்பால் படவேலைகள் தடைபட்டுள்ளன.  இதனால் விஜய் மற்றும் மாஸ்டர் தொடர்பான பேச்சுக்கள் கசியவில்லை.

  விஜய் மகள்

  இளைய தளபதி விஜயும், அஜித்தும் பொது இடங்களுக்கு தங்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்துவருவது மிகவும் அரிது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் விஜயின் மகன் சஞ்சய் தன் பள்ளி நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தோழிகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளளது. 

  Vijay's daughter

  விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார். வெளிநாட்டில் படித்து வரும் திவ்யா, ஒரு பேட்மிட்டன் வீராங்கனை என்பது குறிப்பிடதக்கது.