இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது அடிப்படை உரிமை – உச்சநீதிமன்றம் அதிரடி

  0
  15
  உச்சநீதிமன்றம்

  முன்னாள் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது

  முன்னாள் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அரசியல் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் மற்றும் இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். கட்டுபாடுகளை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர். கவை ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. \

  உச்சநீதிமன்றம்

  அப்போது, ஜம்மு காஷ்மீரில் இணையதள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி 7 நாளில் பரிசீலக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டு உள்ள 144 தடை உத்தரவுகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் ஆணையிட்டது, தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது அரசுகள், நீதிமன்றத்தின் கடமை என்றும் இணையம் மூலம் கருத்து தெரிவிப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

  ஜம்மு காஷ்மீர்

  உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இப்போதுதான் உச்சநீதிமன்றம் யாருடைய அழுத்தமும், நெருக்கடியுமின்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த தேசம் அரசியல் சாசனத்துக்கு தலைவணங்குமே தவிர பாஜகவுக்கு அல்ல எனக்கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.