இட்லி 1 ரூபாய்… வடை 1 ரூபாய்… டீ 3 ரூபாய்-அரியலூரில் ஒரு அதிசய உணவகம்

  0
  12
   காக்கா பிள்ளை கடை

  அரியலூரை அடுத்த பெருமா நல்லூர் வெள்ளாளத் தெருவில் இருக்கும் காக்கா பிள்ளை கடைதான் அந்த அதிசய உணவகம்.
  இந்த உணவகம் துவங்கி 80 ஆண்டுகல் ஆகிவிட்டது.
  அனா,பைசா காலத்தில் தொடங்கப்பட்ட உணவகம் அன்று முதல்ன்இன்றுவரை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

  அரியலூரை அடுத்த பெருமா நல்லூர் வெள்ளாளத் தெருவில் இருக்கும் காக்கா பிள்ளை கடைதான் அந்த அதிசய உணவகம்.
  இந்த உணவகம் துவங்கி 80 ஆண்டுகல் ஆகிவிட்டது.
  அனா,பைசா காலத்தில் தொடங்கப்பட்ட உணவகம் அன்று முதல்ன்இன்றுவரை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் உணவு வழங்கி வருகிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

  hotel

  கடைக்கு பெயர்பலகை கூடக்கிடையாது.80 ஆண்டுகளுக்கு முன் கடையைத் துவங்கிய சிங்காரம்பிள்ளை,வள்ளி தம்பதிகள் காலையில் உணவகத்தில் விற்பனையை தொடங்கும் போது காக்கைக்கு இட்லிகளை பிய்த்துப் போடுவார்களாம்,அதனால் கடைக்கு காக்கா பிள்ளை கடை என்று மக்களே பெயர்வைத்து இருக்கிறார்கள்.

  hotel

  இப்போது கடையை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் சிங்காரத்தின் மகன் ஸ்ரீதரும் அவரது மனைவி ராதாவும்.
  இவர்களுக்கு இரண்டு மகன்கள்.இருவருக்குமே திருமணமாகி விட்டது.எல்லோரும் ஒன்றாகத்தான் வசிக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் முகூர்த்த நாட்களில் அக்கம்பக்கத்தில் இருக்கும் விசேச வீடுகளுக்கு சமைக்கப் போய்விடுகிறார்கள்.

  hotel

  வீட்டில் பெண்கள் அரைத்து வைத்திருக்கும் மாவைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீதர் உணவகத்துக்கு வந்து விடுகிறார்.நாட்டு ஓடு வேய்ந்த , மின்சார வசதியில்லாத அந்தச் சின்னஞ்சிறு கட்டிடத்தில் 
  ஒரு ஈடுக்கு 100 இட்லிகள் வீதம் அவர் இட்லிகளைத் தயார் செய்ய,வீட்டில் இருந்து சாம்பார்,வடை,இரண்டு வகைச் சட்டினிகள் வருகின்றன.
  காலை ஆறுமணிக்கே வாடிக்கையாளர்கள் வரத்துவங்குகிறார்கள்.
  தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.தாமரை இலையில் வைத்துப் பரிமாறப்படுகிறது.
  இட்லி ,வடை மட்டும்தான் மெனு.இட்லி ஒருரூபாய்,சின்ன மெதுவடையும் ஒரு ரூபாய்தான்.சிறிய எவர் சில்வர் டம்ளரில் வழங்கப்படும் டீ மூன்று ரூபாய்.

  hotel

  இட்லி சுட,டீப்போட எல்லாம் விறகடுப்புதான்.வீட்டிலும் விறகடுப்புதான்.வடை சுட மட்டும் கேஸ் அடுப்பு பயண்படுத்துகிறார்கள்.
  ஒரு நாளைக்கு 1500 இட்லி,500 வடை விற்கிறதாம்.ஜெயங்கொண்டம்,அணைக்கரையில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
  இட்லிகள் விற்காமல் மீந்து போகும் நாட்களில் வீட்டில் சமைப்பதில்லையாம்.இட்லிகளை உதிர்த்து உப்புமா செய்து சாபிடுவோம் என்கிறார் ஸ்ரீதர்.

  food

  ஒரு ரூபாய்க்கு,இட்லி,வடை என்பதால் சுவையில் எதுவும் குறைவைக்காமல் சாம்பார்,தேங்காய் சட்னி,காரசட்டின் எல்லாவற்றையும் நல்ல சுவையுடனும் தரத்துடனுமே தருகிறார்கள்.
  அம்மா உணவகம் என்று மலிவு விலை உணவகம் துவங்கிய அரசே விழி பிதுங்கும் நிலையில் சாதாரண குடும்பம் ஒன்று என்பது ஆண்டுகளாக இப்படி ஒரு உணவகம் நடத்துவது ஆச்சர்யம்தாம்.அடுத்த முறை,கங்கைகொண்ட சோழபுரம் போகும்போது அதோடு,இந்த அதிசயத்தையும் பார்த்து , ஆதரவு கொடுக்க மறக்காதீர்கள்.