இடைத்தேர்தல் ரிசல்ட்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு… கதி கலங்கித் தவிக்கும் அமைச்சர்கள்..!

  0
  6
  எடப்பாடி பழனிசாமி

  புதிய இலாகா ஒதுக்கப்படுமா அல்லது மற்றொரு அமைச்சரின் பதவியை பறித்து கொடுக்கப்படுமா என்பது தெரியாததால் அமைச்சர்கள் தங்களது பதவி காலியாகி விடுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள்.

  நாங்குநேரி – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் ஆளுங்கட்சி, வெற்றிபெற்றாலும், தோற்றாலும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு அமைச்சர் பதவி தர முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

  eps

  அமைச்சரவையில், நாடார் சமுதாயத்துக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என நாங்குநேரி பிரசாரத்துக்கு போன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸிடம் அந்த சமுதாய பிரமுகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள். 

  eps

  அதனால், ஸ்ரீவைகுண்டம், எம்.எல்.ஏ., வான, முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு மறுபடியும் அமைச்சர் பதவி தர அதிமுக தலைமை முடிவெடுத்திருக்கிறது. கடைசியாக மணிகண்டனிடம் இருந்த துறை பறிக்கப்பட்டு உடுமலை ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் மாற்றம் இல்லை. புதிய இலாகா ஒதுக்கப்படுமா அல்லது மற்றொரு அமைச்சரின் பதவியை பறித்து கொடுக்கப்படுமா என்பது தெரியாததால் அமைச்சர்கள் தங்களது பதவி காலியாகி விடுமோ என்கிற பதற்றத்தில் இருக்கிறார்கள்.