இடைத்தேர்தல் பிரச்சாரம்: குடுகுடுப்பைக் காரராக மாறி வாக்கு சேகரித்த திமுக கழக பேச்சாளர்…!

  0
  5
  DMK member

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி சார்பிலும் தினந்தோறும் பிரச்சாரங்கள் அத்தொகுதிகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளன. பொதுவாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர், வெள்ளை உடை அணிந்து தனது கட்சி தொண்டர்களுடன் போட்டியிடும் சின்னத்தின் பதாகைகளைக் கொண்டு வீடுதோறும் வாக்கு கேட்பர். 

  By election

  ஆனால், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புது விதமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை, குடுகுடுப்பைக்காரர் ஒருவர் திமுகவின் அருமை பெருமைகளைக் கூறியபடி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிடும் புகழேந்திக்கு வாக்களிக்குமாறு கூறிக் கொண்டிருந்திருக்கிறார். குடுகுடுப்பைக்காரர் ஏன் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்கிறார் எனக் குழம்பிய மக்கள், அவரை விசாரித்ததில், அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கழகப் பேச்சாளர் என்றும் அவரின் பெயர் கோவிந்தன் என்றும் தெரியவந்துள்ளது. 

  DMK Spokes person

  ஏற்கனவே, ஆர்.கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் இவர் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் எனக் கூறப்படுகிறது. இத்தகைய புது வித தேர்தல் பிரச்சாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு வரவேற்பையும் பெற்றுள்ளது.