இசை எனக்கு மட்டும் தான் வரும்; இளையராஜாவின் சர்ச்சை கருத்துக்கு கங்கை அமரன் பதிலடி!

  0
  1
  ilaiyaraja

  தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே இல்லை என்ற இளையராஜாவின் சர்ச்சைக் கருத்துக்கு அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பதில் ட்வீட் போட்டுள்ளார்.

  சென்னை: தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே இல்லை என்ற இளையராஜாவின் சர்ச்சைக் கருத்துக்கு அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பதில் ட்வீட் போட்டுள்ளார்.

  சென்னை ராணி மேரி கல்லூரியில் 75 வயதை நிறைவு செய்த இளையராஜாவுக்கு பவள விழா கொண்டாட்டப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளையராஜா, வழக்கம்போல் தனது ஆர்மோனிய பெட்டியை வைத்து தான் இசையமைத்த பாடல்களையும், அது குறித்த நினைவுகளையும் மாணவிகளிடம் பகிர்ந்துக் கொண்டார்.

  அப்போது பேசிய இளையராஜா, தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல, பல சி.டி.க்களை வைத்து அதேபோல் இசையமைப்பதாகக் கூறி அதையே காப்பியடிக்கின்றனர். படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் அது வராது’ என கூறியிருந்தார்.

  இளையராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என பதிவிட்டுள்ளார்.