இசையமைப்பாளர் செளந்தர்யனின் தாயார் காலமானார் !

    0
    3
    music director soundaryan

    மயிலாடுதுறை அருகே மேக்கிரிமங்களத்தில் வசித்து வந்த இவர் வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

    பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யன், தமிழ் திரையுலகில் 1991 இல் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தில் அறிமுகமாகி, 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சிந்து நதிப் பூ’ என்னும் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது  தயார் அழகம்மாள் (85). மயிலாடுதுறை அருகே மேக்கிரிமங்களத்தில் வசித்து வந்த இவர் வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது. அழகம்மாளின் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.