இசையமைப்பாளரான பிரபல பின்னணி பாடகி!

  0
  5
  ஸ்வாகதா

  ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய பாடகி ஸ்வாகதா தற்போது இசையமைப்பாளராகியுள்ளார்.

  பிரபல பின்னணி பாடகி  ஸ்வாகதா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். 

  நடிகர்கள் இசையமைப்பது, பாடல் பாடுவது, படங்கள் இயக்குவது போன்ற விஷயங்கள் தற்போது சாதாரணமான ஒன்றாகி விட்டது. அந்த அளவிற்கு பலரும் பன்முக திறமையுடன் திரையுலகில் வலம்  வருகிறார்கள். 

  sawgatha

  அந்த வகையில்  காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய பாடகி ஸ்வாகதா தற்போது இசையமைப்பாளராகியுள்ளார். அடியாத்தே  என்ற இசை ஆல்பத்தில் பாடல் பாடி, இசையமைத்து நடிக்கவும் செய்துள்ளார் ஸ்வாகதா.

  swagatha

  இப்பாடலை கெளதம் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா.பார்த்திபன், விக்னேஷ் சிவன், நடிகர் அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது யூடியூபில் வெளியாகியுள்ள அடியாத்தே இசை ஆல்பத்தை கேட்டு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.