இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனே.மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்!

  0
  8
  போரிஸ் ஜான்சன்

  இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுமா , விலகாதா என்பதைத் தீர்மாணிப்பதற்கான பொதுத்தேர்தலாக ஆக்கப்பட்டு விட்டது இந்த 2019 பார்லிமெண்ட்.எலக்‌ஷன்.

  மொத்தம் 650 தொகுதிகள் கொண்டது இங்கிலாந்து பார்லிமெண்ட். இந்தியாவின் மோடி,அமெரிக்காவின் ட்ரம்ப் ஆகியோரோடு ஒப்பிடப்பட்ட போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 364 இடங்களைப் பிடித்திருக்கிறது இதுவரை.

  இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுமா , விலகாதா என்பதைத் தீர்மாணிப்பதற்கான பொதுத்தேர்தலாக ஆக்கப்பட்டு விட்டது இந்த 2019 பார்லிமெண்ட்.எலக்‌ஷன்.

  boris johnson

  மொத்தம் 650 தொகுதிகள் கொண்டது இங்கிலாந்து பார்லிமெண்ட். இந்தியாவின் மோடி,அமெரிக்காவின் ட்ரம்ப் ஆகியோரோடு ஒப்பிடப்பட்ட போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 364 இடங்களைப் பிடித்திருக்கிறது இதுவரை.விரக்ஹாம்,லீ போன்ற நூறாண்டுகளாக செல்வாக்குடன் வென்ற தொகுதிகளைகூட இந்த முறை இழந்து வெறும் 203 சீட்டுகளுடன் பரிதாபமாக நிற்கிறது ஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி.

  தான் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக கோர்பின் அறிவித்து இருக்கிறார்.தோற்றுப்போன ரூத் ஸ்மித் என்கிற பெண் எம்பி தனது தோல்விக்கு காரணம்  தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்தான்.அவர் தங்கள் கட்சியை இணவாதக் கட்சியாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.இந்த இரண்டு முக்கிய கட்சிகளைத் தவிர ஸ்காட்டிஷ் நேசனல் கட்சி 48 இடங்களிலும், இன்னொரு குட்டிக் கட்சியான தொழிலாளர் ஜனநாயகக் கட்சி 11 இடங்களையும் பிடித்து இருக்கின்றன.

  boris johnson

  இதில் வேறு 149 ஓட்டு வித்தியாசத்தில் ஸ்காட்டிஷ் நேசனல் பார்ட்டித் தலவரான நிக்கோலஸ் ஸ்டார்க்சிடம் தோற்றுப்போன தொழிலாளர் ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் வில்சன் பதவி விலகிவிட்டார்.வெற்றி பெற்ற ஸ்காட்டிஷ் நேசனல் கட்சித் தலைவர் நிக்கோலஸின் வெற்றி நடனம் வைரலாகி வருகிறது.1980க்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சிக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. 

  மிருகபலத்துடன் வென்று ஆட்சியைப் பிடித்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த விலகினால் என்னவெல்லாம் நடக்கும் என்று இப்போதே ஐரோப்பிய அரசியல் வல்லுனர்கள் விவாதிக்கத் துவங்கி இருக்கிறார்கள்.