இக்கட்டான காலத்திலும் கர்ப்பிணி பெண்களை தேடிச் சென்று உதவும் நபர்.. வியக்கவைக்கும் மனிதம்!

  0
  1
  ஆகாஷ் ராஜ்

  மருத்துவ பரிசோதனை செய்ய போகும் போதும், பிரசவ  காலத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

  ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பல சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய போகும் போதும், பிரசவ  காலத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் தாம்பரத்தில் பிரிட்டி லில் ஹாட்ஸ் என்னும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ், கர்ப்பிணி பெண்களுக்கு தேடி சென்று உதவி செய்து வருகிறார். 

  ttn

  மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய இந்த இக்கட்டான சூழலில், இவர் தனது காரையும் தன் நண்பரின் காரையும் நிறைமாத  கர்ப்பிணி பெண்களின் போக்குவரத்துக்கு இலவசமாக கொடுத்து, சென்னை முழுவதும் சேவை செய்து வருகிறார். இந்த ஊரடங்கு நாட்களில் இவர் 43 கர்ப்பிணி பெண்களுக்கு உதவி செய்துள்ளார். இதன் மூலம் 23 குழந்தைகள் பிறந்துள்ளன. இத்தகைய அவசர சூழலிலும், கர்ப்பிணி பெண்களுக்கு பேருதவி செய்யும் ஆகாஷுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.