ஆஸ்திரேலியா டாஸ் வின்.. இந்தியா முதல் பேட்டிங்!

  0
  7
  India vs Australia

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.

  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  india t20

  இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த லிமிடெட் ஓவர் போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணியில் இணைந்திருக்கிறார். துவக்க வீரர் ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யார் துவங்குவார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்த நிலையில், இருவரும் அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். 

  மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே மீண்டும் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட்-ற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

   

   

  இந்திய அணியின் சுழல்பந்து வீச்சில் ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் இடம் பெற்றிருக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

  புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக தொடர்ந்து வெளியில் இருக்கிறார்.

  இந்திய அணி வீரர்கள் பட்டியல்: 

  ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், தாக்கூர், முகமது சமி, பும்ராஹ்.