ஆஸ்திரேலியா கூட அசால்டா இருந்திடாதீங்க; இந்திய அணியை எச்சரிக்கும் சச்சின் டெண்டுல்கர் !!

  0
  2
  anna salai

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார். 
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி துவங்கிய இந்த தொடரில், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. 

   கிரிக்கெட் போர்

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள முழு பலம் பொருந்திய இந்திய ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்க்ம் நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் அட்வைஸ் கொடுத்துள்ளார். 
  இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போர் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின்  ரீ எண்ட்ரீ ஆஸ்திரேலிய அணியை முழு பலம் கொண்ட அணியாக மாற்றியுள்ளது. அது மட்டுமல்லாமல் பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறந்து விளங்கி வருகிறது. இது தவிர இந்திய ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நடைபெறும் ஓவல் மைதானமானது பந்துவீச்சிற்கு சாதகமானது என்பதால் நிச்சயம் இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.