ஆஸ்திரேலியாவில் 2 சிறிய ரக விமானங்கள் நடு வானில் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி

  0
  14
  australia

  ஆஸ்திரேலியாவில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  சிட்னி: ஆஸ்திரேலியாவில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியார் விமான பயிற்சி மையம் உள்ளது. நேற்று காலை இங்கிருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த நிலையில் மங்களூர் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த பயிற்சி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

  அப்போது, எதிர் திசையில் வந்த மற்றொரு சிறிய ரக விமானத்துடன் எதிர்பாராத விதமாக பயிற்சி விமானம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 விமானங்களும் அங்குள்ள வயல்வெளியில் கீழே விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் பயிற்சி விமானத்தில் இருந்த 2 பேரும், மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான பாதுகாப்பு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.