ஆஸ்திரேலியாவின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா..!

  0
  11
   இந்தியா

  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் 18 ஆண்டுகால வரலாற்று சாதனையை முறியடித்திருக்கிறது.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி டி20 போட்டிகளில் ஆடிய பிறகு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.

  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் 18 ஆண்டுகால வரலாற்று சாதனையை முறியடித்திருக்கிறது.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி டி20 போட்டிகளில் ஆடிய பிறகு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.

  ind vs sa

  இதில் விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

  இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 601 ரன்கள் அடித்த பிறகு டிக்ளேர் செய்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இரண்டு இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்க அணி மோசமாக ஆடியதால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்தார். அதற்கு அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை பட்டியலில் இடம்பெற்றார்.

  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம், தொடர்ந்து 11 முறை சொந்த மைதானத்தில் நடைபெற்ற தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் 18 ஆண்டுகள் சாதனையை முறியடித்தது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 10 முறை சொந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர்களை வென்றிருக்கிறது.

  india

  தொடர்ந்து அதிகமுறை சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களை வென்ற அணியின் பட்டியல்:

  #1 இந்தியா – 11* முறை (2013 – தற்போது வரை)

  #2 ஆஸ்திரேலியா – 10 முறை (2004 – 2008)

  #3 ஆஸ்திரேலியா – 10 முறை (1997 – 2001)

  -vicky