ஆஸி.,-க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு

  0
  4
  team india

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடரின் இரண்டாம் போட்டி மழையால் தடைபட்டதால் 1-1 என தொடர் சமனில் முடிந்தது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற இந்தியா முதன் முதலாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

  இதையடுத்து, இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

  இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழபிற்கு 298 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்திரேலிய தரப்பில் ஷான் மார்ஷ் 131 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.