ஆவின் பால் டேங்கர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! பால் கிடைப்பது கஷ்டம்…

  0
  3
  ஆவின்

  ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

  வாடகை ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், ரூ.10 கோடி வாடகை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் 30 லட்சம் லிட்டர் பால் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

  ஆவின்

  ஏற்கனவே ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக மாற்றி அமைப்பதோடு, பால் முகவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை  ஆவின் நிர்வாகம் உடனடியாக வழங்கவில்லை என பால் முகவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.