ஆவின் பாலின் புதிய விலை இன்று முதல் அமல்: விலை பட்டியல் இதோ!

  33
  ஆவின்

  அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் அத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

  அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் அத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

  இதுவரை ஒரு லிட்டர் பசும்பால் 28 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் 35 ரூபாயும் இருந்து வந்த நிலையில் தற்போது பசும்பால் 32 ரூபாயும்,  எருமைப்பால்  41 ரூபாயும்  விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசும்பால் 4 ரூபாயும், எருமைப்பால் 6 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  aavin

  சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீல நிற வகை ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு அரை லிட்டர் 17 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 ரூபாய் விலை அதிகரித்து 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் நீல நிற வகை ஆவின் பாலின் அதிக பட்ச விற்பனை விலை 18 ரூபாய் 50 காசிலிருந்து 21 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 1 லிட்டர் 6 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  ஆவின் ஆரஞ்சு நிற வகை பால் அட்டைதாரர்களுக்கு 21 ரூபாய் 50 காசுகள்  விற்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது 24 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 22 ரூபாய் 50 காசிலிருந்து 25 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.

  aavin

  ஆவின் மெஜந்தா நிற வகை பாலின் அரை லிட்டர் விலை அட்டைதாரர்களுக்கு 16 ரூபாய் 50 காசுகள்  விற்கப்பட்டு வந்த நிலையில்  19 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 17 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

  aavin

  பச்சை நிற வகை ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 காசுகள் விற்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது  22 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விற்பனை விலை 20 ரூபாய் 50 காசிலிருந்து 23 ரூபாய் 50 காசாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  milk

  அனைத்து பால் வகைகளும் அட்டைதாரர்களுக்கும், அதிகபட்ச விற்பனைக்கும் அரை லிட்டருக்கு 3 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.