ஆவின் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ்…!

  0
  4
  Lorry

  தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்திற்கு தினந்தோறும் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

  தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்திற்கு தினந்தோறும் பால் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. 2 வருடங்களுக்கு ஒரு முறை போடப்படும் ஒப்பந்தங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டோடு நிறைவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்படவில்லை என்பதாலும், கடந்த 5 மாதங்களாக டேங்கர் லாரிகளுக்கு வாடகைப் பணம் வழங்கப் படாமல் ரூ.10 கோடி உள்ளதாலும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டேங்கர் லாரிகளின் உரிமையாளர் சங்கங்கள் நேற்று அறிவித்தன.

   

  Aavin

  வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தால் தமிழம் முழுவதும் பால் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால், நேற்று  டேங்கர் லாரி உரிமையாளர் சங்கங்களுடன் ஆவின் பொது மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

  aavin