ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும்: ஆட்சியர்கள் உத்தரவு..!

  6
  Borewell

  நேற்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு மேலாக, 7 மீட்புக் குழுவினருடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, 2 வயது சிறுவன் சுர்ஜித் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். நேற்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு மேலாக, 7 மீட்புக் குழுவினருடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

  Surjith

  இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர், பராமரிப்பு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே திறந்திருந்த பல ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியரும் உடனடியாக ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்றும் கிணறுகள் மூடப்பட்டு விட்டதா என்று வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.