ஆழி என்கிற கடல் சிப்பி கறி சாப்பிட்டதுண்டா?.

  119
   கடல் சிப்பி கறி

  தமிழ் நாட்டில் சிப்பி ( mussel,oysters ) சமைப்பதும் சாப்பிடுவதும் மிகவும் குறைவு.பாண்டிச்சேரி,தூத்துக்குடி பகுதியில் சாப்பிடுகிறர்கள்.தூத்துக்குடியில் இதையும் உலர்த்தி கருவாடு போல ஆக்கி வைத்து சாப்பிடுவது உண்டு.
  கேரளாவில் இதற்கு நல்ல மவுசு இருக்கிறது. பெயர்தான் ‘ கக்கா ‘ என்று ஒரு மாதிரியாக வைத்திருக்கிறார்கள்.

  தமிழ் நாட்டில் சிப்பி ( mussel,oysters ) சமைப்பதும் சாப்பிடுவதும் மிகவும் குறைவு.பாண்டிச்சேரி,தூத்துக்குடி பகுதியில் சாப்பிடுகிறர்கள்.தூத்துக்குடியில் இதையும் உலர்த்தி கருவாடு போல ஆக்கி வைத்து சாப்பிடுவது உண்டு.
  கேரளாவில் இதற்கு நல்ல மவுசு இருக்கிறது. பெயர்தான் ‘ கக்கா ‘ என்று ஒரு மாதிரியாக வைத்திருக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் இது ஒரு முக்கியமான கடலுணவு.இதை கடலில் இறங்கி தேடி எடுத்து சுத்தம் செய்வதுதான் கடினம்.சமைப்பது மிகவும் சுலபம்.

  எப்படி சமைப்பது.

  sea oyster

  வீட்டில் நேற்றைய மீன்குழம்பு மீதம் இருக்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து சிப்பிகளை வாங்கி வாருங்கள்.அதன் மேல் சேறு இல்லாமல் சுத்தமாகக் கழுவி எடுத்து வைத்துவிட்டு ஒரு வாய் அகன்ற , மொத்தச் சிப்பிகளையும் கொள்ளும் அளவுள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.நீர் நன்றாக கொதிக்கையில் சிப்பிகளை அள்ளி அந்த கொதி நீரில் போட்டு விட்டு அடுப்பை அனைத்துவிட்டால் நீங்கள் சிப்பி சாப்பிட தயார்.

  எப்படி சாப்பிடுவது..?

  ஒரு கிண்ணத்தில் நேற்றையதோ இன்றையதோ சூடான மீன் குழம்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இப்போது கொதி நீரில் போட்ட சிப்பிகளை தண்ணீரை வடித்து விட்டு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.கையில் ஒரு சிறு கத்தியுடன் அமர்ந்து ஒரு சிப்பியைக் கையில் எடுத்துப் பாருங்கள்.அநேகமாக அது வாயை பிளந்து கொண்டுதான் இருக்கும்.கையில் உள்ள கத்தியால் அந்தப் பிளவை பெரிதாக்கி சிப்பியை விரியுங்கள்.அதன் உள்ளே இருக்கும் சதையை கத்தியால் எடுத்து மீன் குழம்பில் முக்கி வாயில் போட்டுப் பாருங்கள்,வாழ் நாளில் மறக்க முடியாத சுவையாக இருக்கும்.அய்யே பச்சையா எப்படி சாப்பிடறது என்பவர்களுக்கு அடுத்த ஐடியா இது.

  sea oyster

  தேவையான பொருட்கள் :

  தேங்காய் எண்ணெய் 
  உப்பு
  மிளகாய்தூள் அல்லது
  மிளகுத்தூள்

  எப்படிச் செய்வது:

  எல்லா சிப்பிகளையும் திறந்து சதைப்பகுதிகளை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள்.எண்ணெய் சூடானதும் சிப்பிகளைப் போட்டு லேசாக உப்பும் மிளகாய்தூளும் சேர்த்து புரட்டி விட்டு இரண்டே நிமிடத்தில் எடுத்து விடுங்கள்.இல்லாவிட்டால் ரப்பர் போல.ஆகிவிடும்.