ஆர்.பி.ஐ. கவர்னருடன் மோதல்! பதவியை துறந்த துணை கவர்னர் விரால் ஆச்சார்யா! மீண்டும் சர்ச்சை வளையத்தில் இந்திய ரிசர்வ் வங்கி!

  14
  விரால் ஆச்சார்யா

  ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கவர்னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் தகவல் வெளியாகியுள்ளது.

  கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கியை சுற்றி பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து விலகிய பிறகுதான் இந்த சர்ச்சைகள் கிளம்பியது. ரகுராம் ராஜனுக்கு பிறகு கவர்னராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தனது பதவி காலம் முடிவதற்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார்.

  இந்திய ரிசர்வ் வங்கி

  சொந்த காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக உர்ஜித் படேல் கூறினாலும், மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்தான் அவர் வெளியேறியதாக ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. உர்ஜித் படேல் வெளியேறியதையடுத்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்தி கந்ததாஸை மத்திய அரசு நியமனம் செய்தது. சரி அதன்பிறகாவது சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்று பார்த்தால் தற்போது மீண்டும் கிளம்பியுள்ளது.

  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான விரால் ஆச்சார்யா திடீரென தனது பதவி ராஜினாமா செய்துள்ளார்.  பதவி காலம் முடிவடைதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் ஆச்சார்யா தனது பதவியை துறந்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொருளாதார தராளமயலுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட மிகவும் இளமையான துணை கவர்னர் விரால் ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது. 

  துணை கவர்னர் பதவியை துறந்த விரால் ஆச்சார்யா, அமெரிக்கா சென்று  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பாடம் எடுக்க உள்ளார். உர்ஜித் படேல் பதவி விலகிய பிறகு விரால் ஆச்சார்யா ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து வந்தார். ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு தலையீட்டை மறைமுகமாக சாடியவர் விரால் ஆச்சார்யா. 2018 அக்டோபர் 26ம் தேதியன்று ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்படும் என்று வலியுறுத்தி இருந்தார்.

  சக்தி கந்ததாஸ்

  கடந்த 2 ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தின்போதும், கவர்னர் சக்தி காந்த தாசுக்கு விரால் ஆச்சார்யாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல். இது போன்ற காரணங்களால்தான் விரால் ஆச்சார்யா தனது பதவி காலம் முடிவடைதற்கு முன்பே பணியிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல். விரால் ஆச்சார்யாவின் ராஜினாமா குறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.