ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் ரூ.1 கோடி நிதி!

  0
  6
  டிடிவி தினகரன்

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.  அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  ttn

  இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகப் பொதுச்செயலாளரும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அவர்கள் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பெருந் தொற்றுநோயான கொரோனா   தடுப்பு பணிகளுக்காக தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை இன்று அளித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.