ஆரவுடன் லிவிங் டுகெதரா? அட நீங்க வேற..! திருமண வதந்திக்கு டாட் வைத்த ஓவியா..!

  0
  5
  oviya

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக பரவிய வதந்திக்கு நடிகை ஓவியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக பரவிய வதந்திக்கு நடிகை ஓவியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலை சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

  oviya

  இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாக சகஜமாக பழகி வருகின்றனர். அவ்வப்போது பொது இடங்களுக்கு ஒருவரும் ஒன்றாக செல்லும்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.

  oviya

  இந்நிலையில், ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜபீமா’ திரைப்படத்தில் ஓவியாவாகவே சிறப்பு வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை ஓவியா, ராஜபீமா திரைப்படத்தில் நானும், ஆரவும் நடனமாடும் பாடலை ஆரவ் தான் பாடியுள்ளார். அந்த பாடலில் என்னை பற்றி வர்ணிக்கும் வரிகள் அதிகம் உள்ளது. ஆரவும் நானும் நல்ல நண்பர்கள், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் இடையே அதிக கருத்து வேறுபாடு இருந்தது தற்போது பேசி சரி செய்துவிட்டோம்.

  oviya

  சமீபகாலமாக நானும் ஆரவும், நெருங்கி பழகுவதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும், லிவிங் டுகெதரில் வாழ்வதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அதெல்லாம் சுத்த பொய், அப்படி இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம் என்றால் அதை நானே வெளிப்படையாக கூறிவிடுவேன். ஆரவ் எனக்கு நல்ல நண்பர்.

  மேலும், கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறுவயதில் இருந்தே சுதந்திரமாக வளர்ந்ததால், எனக்கு கல்யாணம், குடும்பம் எல்லாம் செட்டாகாது. இதுவரைக்கும் ஒரு துணை வேண்டும் என்று தோன்றவில்லை என ஓவியா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஓவியா ஆர்மியினர் தலைவி சிங்கிள்டா என ஸ்டேட்டஸ் போட்டு தெறிக்கவிடுகின்றனர்.