ஆமா, நான் நெய்வேலியில கஞ்சாதான் விக்கிறேன் – வீடியோ ரிலீஸ் செய்த இளைஞர்!

  0
  4
  Weed Manikandan

  அந்த வீடியோவில் கஞ்சா வியாபாரிகளாகவும் வாடிக்கையாளர்களாகவும் ஆறு இளைஞர்கள் காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை இன்னொருவர் வீடியோ எடுக்கிறார். கையில் கஞ்சா பொட்டலங்களுடன் இருக்கும் இளைஞர் வீடியோவில் எந்த பதட்டமுமின்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். தன் பெயர் மணிகண்டன் என்றும், தன் பெயரில் 28 வழக்குகள் இருப்பதாகவும் தெளிவாக பேசுகிறார்.

  நெய்வேலியில் தான் கஞ்சா விற்பதாகவும் தன்மேல் 28 வழக்குகள் இருப்பதாகவும் கையில் கஞ்சா பொட்டலங்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார் இளைஞர் ஒருவர். அந்த வீடியோவில் கஞ்சா வியாபாரிகளாகவும் வாடிக்கையாளர்களாகவும் ஆறு இளைஞர்கள் காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை இன்னொருவர் வீடியோ எடுக்கிறார். கையில் கஞ்சா பொட்டலங்களுடன் இருக்கும் இளைஞர் வீடியோவில் எந்த பதட்டமுமின்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். தன் பெயர் மணிகண்டன் என்றும், தன் பெயரில் 28 வழக்குகள் இருப்பதாகவும் தெளிவாக பேசுகிறார்.

  Weed

  வீடியோவில் இளைஞர்கள் பேசுவதை பார்க்கும்போதும் கேட்கும்போதும், ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. காவல்துறையின் மிக ஆதரவான கரங்கள் அவர்களை அரவணைத்திருக்கிறது. இல்லை என்றால், 28 வழக்குகள் ஒருவர்மேல் இருந்தும், அவர் தைரியமாக கஞ்சா பொட்டலங்களுடன் வீடியோவில் தோன்ற முடியுமா? எசகுபிசகா வீடியோ ஒண்ணு ரிலீஸாகிட்டா இந்த நாட்ல ஃபேமஸாகிடலாம்னு கத்துக்கொடுத்த நித்தியானந்தாவைச் சொல்லணும்!