ஆபாச படம் வருதா? அப்போ முதல்ல உங்க ஹிஸ்ட்ரிய டெலிட் பண்ணுங்க சார்: புகார் சொன்னவருக்கு பல்பு கொடுத்த ஐஆர்சிடிசி!?

  0
  8
  விளம்பரங்கள்

  ஐஆர்சிடிசி ஆப்பில் வரும் விளம்பரங்கள் பற்றி புகார் செய்தவருக்கு  ரயில்வே நிர்வாகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

  ஜார்கண்ட்: ஐஆர்சிடிசி ஆப்பில் வரும் விளம்பரங்கள் பற்றி புகார் செய்தவருக்கு  ரயில்வே நிர்வாகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

  ஜார்கண்டைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர்  இந்திய ரயில்வே  துறையின் ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யப்போனாலே ஆபாச விளம்பரங்கள் அதிகம் வருகிறது என்றும் இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு  அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த பதில் தான் ஷாட் டாப்பிக்காக  உள்ளது.

   

  அதாவது  ஆனந்த்குமாரின் பதிவுக்கு பதிலளித்த இந்திய ரயில்வே நிர்வாகம், ‘ஐஆர்சிடிசி விளம்பரங்களை வழங்குவதற்குக் கூகுள் விளம்பர சேவையைப் பயன்படுத்துகிறது. இதில் பயனாளர்களின் பிரௌசிங் ஹிஸ்டரி மற்றும் இணையத்தில் அவர்கள் பார்த்த விஷயங்களைப்  பொறுத்தே விளம்பரங்கள் வரும். எனவே உங்கள் பிரௌசர் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யுங்கள். அப்போதுதான் இந்த விளம்பரங்கள் வருவதைத் தடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

   

  ரயில்வே நிர்வாகம் மீது குறை கூறி பெரிய ஆள் ஆகி விடலாம் என்று நினைத்துப் பதிவிட்ட  பயனாளருக்கு ஐஆர்சிடிசி தக்க பதிலடி கொடுத்து அவரது மூக்கை உடைத்துள்ளது என்று வலைதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.