“ஆபாச படம் பார்த்துட்டே காரில் போலாமா “ஓலா ட்ரைவரின் ஒழுக்கங்கெட்ட செயல்

  0
  19
  Rep. Image

  நவி மும்பையில் உள்ள அய்ரோலியில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்ல சனிக்கிழமை பிற்பகல் ஒரு ஓலா காரை ஒரு பெண் முன்பதிவு செய்து பயணம் செய்தார். பயணத்தின்போது, ​​அந்த ஓலா டிரைவர் வெறித்தனமாக வாகனம் ஓட்டுவதை அந்தப் பெண் பார்த்து மெல்ல போகும்படி கூறினார்.

  நவி மும்பையில் உள்ள அய்ரோலியில் உள்ள தனது இல்லத்திற்குச் செல்ல சனிக்கிழமை பிற்பகல் ஒரு ஓலா காரை ஒரு பெண் முன்பதிவு செய்து பயணம் செய்தார். பயணத்தின்போது, ​​அந்த ஓலா டிரைவர் வெறித்தனமாக வாகனம் ஓட்டுவதை அந்தப் பெண் பார்த்து மெல்ல போகும்படி கூறினார்.
  ஆனால் டிரைவர் அன்சாரி தான் இப்படித்தான் ஓட்டுவேன் என்றும், அவர் தனது வண்டியில் பயணிக்க விருப்பமில்லையெனில் இறங்கிக்கலாம் என்று சொன்னார். மேலும் சிறிது நேரம் கழித்து, வாகனம் ஓட்டும் போது அவர் தனது மொபைலில் பேசத் தொடங்கினார். அதை பார்த்த அந்த பெண் மீண்டும் அவரிடம் போன் பேசுவதை நிறுத்துங்கள் என்று கூறினார். அவரது பேச்சால் கோபமடைந்த அன்சாரி, வாகனத்திலிருந்து கீழே இறங்கும்படி அவரிடம் சொன்னார். இதனால் அந்த பெண்  வண்டி ஓட்டுநரின் நடத்தை குறித்து ஓலாவிடம் புகார் கூறினார்.

  arrested

  அவரது புகாரின் பேரில், ஓலா நிறுவனம் ஓட்டுநரின் ஐந்து நாள் சம்பளத்தினை குறைத்தது. இந்த நடவடிக்கையால் கோபமடைந்த அன்சாரி, புகார் அளித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல் செவ்வாயன்று, அவரின் மொபைல்க்கு ஒரு தெரியாத எண்ணிலிருந்து ஒரு ஆபாச வீடியோ வந்தது. இது அன்சாரியின் வேலை என்று சந்தேகித்த அவர், போலீஸை அணுகி அவர் மீது புகார் செய்தார். அன்சாரி கைது செய்யப்பட்டு ஐபிசி பிரிவு 354-டி (ஸ்டாக்கிங்) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.