ஆபாச படங்களை பார்த்தாலே குற்றமா? என்ன சொல்கிறது 67A மற்றும் 67B சட்டப்பிரிவு

  175
  மாதிரி படம்

  குழந்தைகளின் ஆபாச படங்கள் தொடர்பாக உருவாக்கியவர்கள்,  பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்களின் பட்டியலை தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அளித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள அனைவர் மீதும் சட்டம் பாயும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

  குழந்தைகளின் ஆபாச படங்கள் தொடர்பாக உருவாக்கியவர்கள்,  பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்களின் பட்டியலை தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அளித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள அனைவர் மீதும் சட்டம் பாயும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

  camera

  குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பாலியல் வக்கிர நோக்கில் பார்ப்பவர்கள் ஒரு வகை மனோவியாதி இருப்பவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆபாசப் படங்கள், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், உள்ளிட்டவற்றுள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 67 A, ன்படி ஒருவர் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் காணுவதை குற்றச் செயலாக வரையறுக்கவில்லை. படங்களை மின்னணு வடிவில் வெளியிட்டாலோ, பகிர்ந்தாலோ குற்றச் செயலாக வரையறுக்கிறது.

  சட்ட பிரிவு எண் 67 B ன்படி குழந்தைகளின் ஆபாசக் காணொளிகள், படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, பகிர்வது பார்ப்பது உள்ளிட்டவற்றை குற்றமாக வரையறுப்பதோடு, இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்குகிறது. 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டமோ, குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரை அளிக்கிறது.

  law

  தமிழகத்தில் இருப்பது போல 1000 பேருக்கு மேல் குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தவர்களும், பகிர்தவர்களும், உருவாக்குபவர்களும், பதிவிறக்கம் செய்பவர்களும் இருக்கிற பட்டியல் போல் நீண்டதொரு பட்டியல், உலகிலேயே இல்லை என்பதுதான் நமக்கு கிடைத்திருக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்