ஆனந்த் படத்துக்கு முன் – பின் : நினைவலைகளை பகிர்ந்த அமிதாப்

  0
  10
  piyush manush

  1971-ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த்’ திரைப்படம் அமிதாப் பச்சன் வாழ்வை எப்படி மாற்றியது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்.

  1971-ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த்’ திரைப்படம் அமிதாப் பச்சன் வாழ்வை எப்படி மாற்றியது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்.

  இந்திய சினிமா ஆளுமைகளில் மிக முக்கியமானவர் அமிதாப் பச்சன். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 1971-ஆம் ஆண்டு, மார்ச் 12-ஆம் தேதி அமிதாப் நடிப்பில் வெளியான ‘ஆனந்த்’ திரைப்படம் எப்படி அவர் வாழ்வை மாற்றியது என்ற சுவாரஸ்ய தகவல் ஒன்றை அவரது ரசிகர் பகிர்ந்துள்ளார். அதற்கு அமிதாப் பச்சனும் பதில் அளித்திருக்கிறார்.

  ஆனந்த் திரைப்படம் வெளியான அன்று காலை அமிதாப் ஒரு பெட்ரோல் பங்க்குக்கு சென்று தன் காரில் பெட்ரோல் அடித்துக்கொண்டு புறப்பட்டார். அவரை அப்போது யாருக்கும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மாலை அதே பெட்ரோல் பங்க்குக்கு வந்தபோது அங்கிருந்த அத்துனை பேரும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள் என அமிதாப் ரசிகர் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவை ரீட்விட் செய்து, இது உண்மையாக நிகழ்ந்தது. அது எஸ்வி ரோட்டில் உள்ள இர்லா பெட்ரோல் பங்க் என தன் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.