‘ஆந்திர முதல்வர் என்னை பாலோ பண்ணுறாரு போல’ : சீமான் தகவல்!

  0
  2
  சீமான்

  ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்களை  அமல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறார்

  நெல்லை: நான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி  செயல்படுத்தி வருகிறார் என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

  jagan

  ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்களை  அமல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறார். ஆனால்  முதல்வராவதற்கு முன்பே மக்கள்படும் துயரங்களைக் கேட்டு அறிந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி அதன் வெளிப்பாடாகவே சிறப்பு திட்டங்களை அறிவிக்கிறார் என்று சொல்லாம். குறிப்பாக போலீஸுக்கு  வாரம் ஒருநாள் விடுமுறை, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.  இதனால் ஆந்திர மக்கள் ஜெகனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 

  seeman

  இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த  சீமான், ‘தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். என்னுடைய புத்தகத்தை அவர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அளிப்பேன் என்று கூறிய எனது திட்டம்  அங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனது திட்டங்கள்  அனைத்தும் ஆந்திராவில் நிறைவேறி வருகிறது’ என்றார்.