ஆதித்யஅருணாச்சலமாக தர்பாரில் வலம் வரும் ரஜினிகாந்த் ! காவல்துறை கெட்டப்பில் கலக்கும் சூப்பர்ஸ்டார் !

  0
  2
  nivethathomas

  தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்ய அருணாச்சலம் என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவருக்கு மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்.

  தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்ய அருணாச்சலம் என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவருக்கு மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்.

  பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை காவல்துறை அதிகாரியாக பார்த்திருக்கிறோம். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் கடத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் தோன்றுகிறார்.

  darbar

  தர்பார் படத்தில் நயன்தாரா , யோகிபாபு உள்ளிட்டோர் பிரதான படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவேறி உள்ளது.

  தர்பார் படத்தில் ரஜினிகாந்த்துக்கு மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்று பதிவிட்டுள்ளார். என்றுமே உலகம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது ஒரே ஒரு ஆதித்ய அருணாச்சலம்தான் என நடிகர் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடை செய்துள்ளார். அவர்தான் என் எப்பா அவரை தர்பார் படத்தில் பாருங்கள் என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளர் நிவேதா தாமஸ்.

  twitternivetha

  இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்து நவம்பர் 7ம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளயாகும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.