“ஆதாரால் சேதாரமானார் “- ஆன்லைனில் வெளியான ஆதார் கார்டு -தாங்கவில்லை வாலிபர் வேதனையில் படும்பாடு …

  0
  1
  மாதிரி படம்

  மும்பை ,குர்கான் பகுதியை சேர்ந்த 34 வயது பொறியாளர் தாப்ரே  ,இவரது ஆதார் கார்டின் காப்பியை யாரோ ஒருவர் 2012 ம் ஆண்டு ஆன்லைனில் வெப்சைட்டில் வெளியிட்டுவிட்டார் .அதனால் இவர் படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல .இவரின் நரக வாழக்கையை கேட்டால் பேங்க் அக்கௌன்ட் ,கிரெடிட் கார்டு அக்கௌன்ட் நம்பர் போல நாம் ஆதார் கார்டையும் பாதுக்காக்க வேண்டுமென தெரிந்துகொள்ளலாம் 

  aadhar

  vp ரோடு போலீஸ் தகவல் படி ,2012 ம் ஆண்டு தாப்ரே வின் ஆதார் கார்டு நகலை யாரோ ஒருவர் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் ,அதை வைத்து ஒருவர் போன் connection வாங்கியுள்ளார் .ஒரு நாள் போலீஸ் இவரை தேடிவந்து நீங்கள் ஒரு பெண்ணை உங்கள் போனிலிருந்து ஆபாசமாக பேசியுள்ளதாக கூறி கைது செய்தது ,பிறகு போலீசுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்து உண்மையை உணரச்செய்து அதிலிருந்து தப்பினார் தாப்ரே.அதோடு அந்த பிரச்சினை முடிந்தது என நினைத்தால் மேலும் தொல்லைகள் தொடர்ந்தது .

  arrest

  ஆம் ஆன்லைனில் வந்த இவரின் ஆதார் கார்டை பலர் வங்கி கணக்குக்கும் ,பொருட்கள் ஆன்லைனில் வாங்குவதற்கும் தவறாக பயன்படுத்தியுள்ளனர் ,ஏனென்றால் இவர் வாங்காத பொருளுக்கு இவருக்கு 17000 ரூபாய் பில் வந்துள்ளது ,இவர் பேங்க் கணக்கு திறக்க போனால் அங்கு உங்கள் ஆதாரில் ஏற்கனவே கணக்கு உள்ளதாக தகவல் சொல்கிறார்கள் .

  bank

  தினமும் முன்பின் தெரியாத நபர்கள் தாப்ரே வீடு தேடி வந்து கடனை  கட்ட சொல்லி கேக்கிறார்கள் ,மெயில் மூலமாகவும் பலர் இவரை மிரட்டுகிறார்கள் ,யார் யாரோ சண்டிகர் ,அஸ்ஸாம் ,ஹரியானா போன்ற பகுதியில் இவரது ஆதார் நம்பரை  பயன்படுத்தி கடன் வாங்கிவிட்டு இவரை மாட்டி விடுகிறார்கள் .

  aadhar

  தினம் தினம் நரக  வாழ்க்கை வாழும் தாப்ரே,.UIDAI லும் மற்றும்   சைபர் போலீசிலும்  புகார் தந்துள்ளார் .அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லி எந்த முன்னேற்றமுமில்லை என தாப்ரே புலம்புகிறார் 
  ஆதார் கார்டை இனி நாம் ஜாக்கிரதையாக  பாதுகாக்க வேண்டும் என இவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது