ஆதாரத்துடன் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்

  0
  4
  Sidhdha medicine

  ஆதாரத்துடன் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

  டெல்லி: ஆதாரத்துடன் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

  இந்தியாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பிரதமர் மோடி கொரோனா பாதிப்பை தடுக்கும் மருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக முக்கியமான சில ஆயுர்வேத துறை வல்லுநர்களுடன் பிரதமர் அலுவலகம் சார்பில் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழு தலைவர் புது.ஜெயப்பிரகாச நாராயணன் சித்த மருத்துவர்கள் சார்பாக பிரதமரிடம் நேரடியாக உரையாற்றினார்.

  ttn

  அப்போது “கபசுரக் குடிநீரை” கரோனா பாதிப்பு பெற்றஆனால் குறிகுணங்கள் இல்லாத  நபர்களுக்கு அரசு வழங்க வேண்டும் எனவும், மாநில அரசுகளுக்கு பிரதமர் அலுவலகம் நேரடியாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் ஜெயப்பிரகாச நாராயணன் கேட்டுக் கொண்டார். முந்தைய காலங்களில் தமிழகத்தில் டெங்குவை நிலவேம்பு கஷாயம் மூலம் பெருமளவில் ஒழித்ததை பற்றி பிரதமருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதை பிரதமரும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

  ttn

  இந்த நிலையில் பிரதமர் மோடி ஆயுர்வேத துறை வல்லுனர்களிடம் பேசுகையில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா, ஓமியோபதி துறைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஆனால் ஆதாரத்தின் அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகளின் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும். அதையே உலகமும், நவீன மருத்துவமும் எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.