ஆண்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுங்க! பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி

  11
  பிரியங்கா காந்தி

  எனது சகோதரிகள் ஆண்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். தேர்தல்களில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வர வேண்டும் என பெண்களுக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

  அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  பொதுச் செயலாளரும், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளருமான பிரியங்கா நேற்று லக்னோவில் கட்சி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது:

  காங்கிரஸ்

  அதிகாரத்துக்கு அதிகளவில் பெண்கள் வர வேண்டும். ஆண்களிடமிருந்து அதிகாரத்தை பறியுங்க என நான் என் சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுடையதாக இருக்க வேண்டிய அதிகாரத்துக்காக பஞ்சாயத்து, சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுங்கள்.

  பெண்கள்

  மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநிலத்தின் அரசு பொறுப்பாகும். இந்த அரசு பெண்களுக்கு ஆதரவான அரசா அல்லது குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசா என்பதை முதலில் அரசு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.