ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்..காப்பாற்ற முயன்று உயிரிழந்த யாகேஷ் : ரூ.10 லட்சம் நிதியுதவி!

  0
  1
  edapadi palanisamy

  வழக்கமாகச் செல்லும் ஷேர் ஆட்டோ என்று நினைத்து பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில், டிரைவர் உட்பட 3 ஆண்கள் இருந்தனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருவள்ளூர் செம்பரம்பாக்கம் பகுதியில், வழக்கமாகச் செல்லும் ஷேர் ஆட்டோ என்று நினைத்து பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில், டிரைவர் உட்பட 3 ஆண்கள் இருந்தனர். அந்த ஆட்டோ வழிமாறி போனதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்குள் ஆட்டோ சுமார் 13 கி.மீ தூரம் வரை சென்றுள்ளது. ஆட்டோவில் இருந்த அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டுள்ளார்.

  ttn

  அந்த ஆட்டோவின் பின்னால் சென்ற 5 இளைஞர்கள், அந்த பெண்ணின் சத்தம் கேட்டு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனிடையே அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துத் தப்பித்துள்ளார். ஆட்டோவை பின்  தொடர்ந்து சென்ற 5 பேரில், 3 பேர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீதி இரண்டு பேர் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, அந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வைத்து பைக் மீது மோதியுள்ளார். இதில் அந்த இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் யாகேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

   

  ttn

  இது குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர், உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த ஃபிராங்க்ளினுக்கு ரூ.2 லட்சமும், பெண்ணை காப்பாற்றிய அந்த 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.