ஆட்டையை கலைத்த ஷெரின்: தர்ஷன் – சனம் ஷெட்டி பிரேக் அப்?! ஷாக்கான ரசிகர்கள்!

  0
  12
   ஷெரின்-தர்ஷன்

  தனிப்பட்ட வாழ்க்கை என்னால் பிரச்னையை சந்திக்கக் கூடாது என்று தர்ஷனிடமிருந்து விலகினார்.

  பிக் பாஸ் தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரேக்-அப் ஆகிவிட்டதாகச் செய்திகள் உலா வருகின்றன. 

  sanam

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில் தர்ஷன்  வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் மீள முடியாத  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

  sherin

  தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம் ஷெரின் தான். அவருடைய செயல்கள் போலியாக உள்ளது என்று தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். காரணம் பிக் பாஸ் வீட்டில் ஷெரினும் தர்ஷனும் நட்பு என்பதைத் தாண்டி பழகி வந்தார்கள்.

  sherin

  ஷெரின் தர்ஷன் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளது என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்னால் பிரச்னையை சந்திக்கக் கூடாது என்று தர்ஷனிடமிருந்து விலகினார். அதேபோல் தர்ஷனும் ஷெரினை சந்திக்கவில்லை. மாறாக தனது காதலியுடன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்தார்.

   

  இந்நிலையில் சனம் ஷெட்டியின் பதிவு ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ‘நான் நிறைய கேட்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் கேட்டு விட்டேன் என்பது இப்போது தான் புரிகிறது என்றும் நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை.  போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். அது லாபமோ வையுங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

  இதைக்கண்ட நெட்டிசன்கள், சனம் உங்களுக்கும் தர்ஷனுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதா? என்றும் உங்கள் காதலுக்கு தர்ஷன் தகுதியானவர் அல்ல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.