ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர் என சோனியா காந்தி செய்ததைத்தான் ரஜினிகாந்த் சொல்கிறார்! – காங். எம்.பி பேச்சு

  0
  2
  Manickam Tagore

  ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர் என்று சோனியா காந்தி செய்து காட்டியதைத்தான் ரஜினிகாந்த் தற்போது தெரிவித்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்தாகூர் கூறியுள்ளார்.
  விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் பங்கேற்றுப் பேசினார்.

  manikam

  அப்போது அவர், “ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் அறிஞராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும், கட்சித் தலைமைக்கு அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்படாதவர் வர வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதை 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் செய்துவிட்டது. ஆட்சிக்கு மன்மோகன் சிங், கட்சிக்கு சோனியா காந்தி என்று அப்போதே நடந்துவிட்டது. அந்த 10 ஆண்டுகால இந்த வழியில்தான் சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங் சிந்தனைக்கு நிகரான சிந்தனையை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார்.

  raji

  தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு. கமிஷன், கரப்ஷனில் திளைக்கும் அரசு. இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை அமைச்சரே செய்கிறார். அடித்துவிட்டு அமைச்சர் மகிழ்ச்சியாக சுற்றியும் வருகிறார்” என்றார்.