ஆடுகளுக்கு மாஸ்க், டாக்டர்கள் மீது தாக்குதல்.. செலவுகளை கடுமையாக குறைக்கும் டெல்லி அரசு…

  0
  6
  ஆடுகளுக்கு மாஸ்க்

  டெல்லியில் சப்தாஜங் மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள்  பழங்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் இருவரையும் கொரோனா வைரஸ் பரப்வுவதாக கூறி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மருத்துவர்கள் மீது தாக்குதல்

  டெல்லியின் தற்போதைய வருவாய் நிலவரத்தை கவனத்தில் கொண்டு பெரிய அளவில் செலவுகளை குறைக்க உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சம்பளம், கொரோனா வைரஸ் மற்றும் லாக் டவுன் தொடர்பான செலவுகளை தவிர்த்து மற்ற செலவினங்களை நிறுத்துமாறு அரசு அலுவலகங்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

  கோவாவில் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது அல்லது விலக்கி கொள்வது தொடர்பாக ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

  கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

  அமெரிக்காவில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தெலங்கானாவில் கல்லுர் மண்டல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்வரா ராவ் என்பவர் தனது ஆடுகளை கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து காக்கும் நோக்கில் அவற்றுக்கு மாஸ்க் அணிந்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

  இந்திய உணவு கழகம்

  ஊரடங்குக்கு மத்தியில் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் தொண்டு நிறுவனனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகளுக்கு ஆன்லைன் ஏல நடைமுறை இல்லாமல் வெளிசந்தை விற்பனை திட்ட விலைகளில் அரசி மற்றும் கோதுமை வழங்க இந்திய உணவு கழகத்துக்கு மத்தயி அரசு உத்தரவிட்டுள்ளது.