ஆடிய ஆட்டமென்ன…. பறிபோனது மீரா மிதுனின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி வேலை…

  0
  3
  மீரா மிதுன்

  சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

  சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ எம் வாட்சிங் என பதிவிட்டிருந்தார்.

  மீரா மிதுன்

  இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. டெல்லியில் முறையாக தேர்வு எழுதிதான் வாங்கினேன் என விளக்கமளித்திருந்தார். அதுமட்டுமின்றி கடந்த மாதம் நடைபெற்றப் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீரா மிதுன்,   டிசம்பர் மாதம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். 

  Anti corruption statement

  இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறீர்கள். உங்கள் மீதுள்ள மோசடி வழக்குகள், புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த  3 ஆம் தேதி நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.