ஆச்சி மசாலாவுக்கு தடை! பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது!

  0
  2
  ஆச்சி மசாலா

  தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆச்சி மசாலா நிறுவனம் சமையலுக்கான மிளகாய் தூள் உட்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி  கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆச்சி மசாலா நிறுவனம் சமையலுக்கான மிளகாய் தூள் உட்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி  கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

  aachi

  ஆய்விற்கு பிறகு அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நுகர்வோரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  aachi masala

  தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள பெட்டிக் கடைகளில் எல்லாம் ஆச்சி மசாலா நிறுவனத்தின் பொருட்களை விற்பனையில் உள்ளன. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குலோப் ஜாமூன் வகையான பொருட்களையும் ஆச்சி மசாலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருவதால், இதுவரையில் ஆச்சி மசாலா பொருட்களைப் பயன்படுத்தி வந்த மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றனர்.