ஆசை காதலி லாஸ்லியாவுக்காக கவின் செய்த செயல் 

    0
    1
    கவின்-லாஸ்லியா

    பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

    சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை நெருங்குகிறது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் நான்கு பேர்களிடமும் லூட்டி அடித்துக் கொண்டு இருந்த கவின் ஒரு கட்டத்தில் சாக்ஷி மற்றும் லாஸ்லியா என்று குறைத்துக் கொண்டார். 

    பிறகு  லாஸ்லியா மீதும் அவருக்கு ஒரு கண் இருந்ததால் சாட்சியாய் கழட்டி விட்டு அவருடன் காதலில் விழுந்துவிட்டார். நாள்தோறும் இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 

    இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கவின் தனது ஆசை காதலிக்காக டி போட்டு அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்து செல்கிறார். அதை கண்ட சக ஹவுஸ் மேட்ஸ் அவரை கலாய்ப்பது போல் உள்ளது. இதை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல் விஜய் டீவியை வசைபாடி வருகின்றனர்.