ஆசிரமத்தில் சிறுமிகளை துன்புறுத்திய நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

  0
  5
  Nithyananda

  அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  ஆசிரமத்திலிருந்த தங்களது மகளை கடத்தியதாக நித்தியானந்தா மீது சர்மா என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  ஆசிரமத்திலுள்ள சிறுமிகளுக்கு நன்கொடை வசூல் டார்கெட் கொடுக்கப்பட்டதாக ஆசிரமத்திலிருந்து வெளியேறிய சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

   Nithyananda

  நன்கொடையாளர்களிடம்  சாதுர்யமாக பேசி ஒவ்வொரு சிறுமியும் ஒரு கோடி முதல் 4 கோடி வரை நன்கொடை செய்ய வேண்டும் என்றும், இரவில் எழுப்பி கொடுமைப்படுத்தியதாகவும் சிறுமி தகவல் அளித்தார். இதன் அடிப்படையில் அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சோதனை நடத்த சென்ற அதிகாரிகளுக்கும் நித்தியானந்தா மட நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

  முன்னதாக சர்மாவின் மகள் அவரது பேஸ்புக் பக்கத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் பாதுகாப்பாகதான் இருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.