ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்?

  0
  1
  முகேஷ் அம்பானி

  தனது குடும்ப பயன்பாட்டிற்காக செகண்ட் ஹாண்ட்  கார் டெஸ்லா மாடல் எஸ் 100 டி வைத்திருக்கிறார்.

  மும்பை:  இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் உள்ள முகேஷ் அம்பானி செகண்ட் ஹாண்ட்  காரை  வாங்கி பயன்படுத்தி வருகிறார். 

  ambani

  ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக  விளங்கும் முகேஷ் அம்பானி தனது குடும்ப பயன்பாட்டிற்காக செகண்ட் ஹாண்ட்  கார் டெஸ்லா மாடல் எஸ் 100 டி வைத்திருக்கிறார்.  இது வெளிநாட்டில் உற்பத்தி செய்துள்ளது மட்டுமின்றி,  அநேக சிறப்பம்சங்கள் இருப்பதினாலும் கூட  இந்த காரை அவர் வைத்திருக்கக் கூடும். பல்வேறு தொழில்களில் புரளும் பணம், ஆடம்பர வாழ்க்கை, புகழ், செல்வாக்கு என அனைத்திற்கும் சொந்தக்காரராக விளங்கும் அவர் ஏன் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கினார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

  ambani

  அதற்கான காரணத்தைப் தற்போது பார்க்கலாம். சாதாரணமாக வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டால் அது முதல் அந்த நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு செய்யப்படும். பிறகு முழு பணத்தையும் செலவு செய்த பிறகே அது சம்மந்தப்பட்ட நபரின் பெயரில் அது பதிவு செய்யப்படும். இதற்கு நேரமும் அலைச்சலும் ஏற்படும். அதனால் தான்  நேரத்தை வீணடிக்காமல்   டெஸ்லா மாடல் எஸ் 100 டி காரை செகண்ட் ஹாண்ட்டில்  வாங்கியிருக்கிறார் அம்பானி.  இந்த காரானது   “RELIANCE INDUSTRIES LTD” என்ற பெயரில் இரண்டாவது உரிமையாளர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

  mukesh ambani

   

  மின்சார வாகனமான இந்த கார்  100 கிலோவாட் பேட்டரி கொண்டது. மேலும் இது வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 396 கி.மீ தூரத்திற்குச் செல்ல வெறும் 42 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதுமானது . அமெரிக்காவில் இந்த காரி விலை 73 லட்சம்  ஆகும். அதுவே இந்தியாவில் இறக்குமதி செய்து பதிவு செய்தால் ரூ.1.5 கோடி செலவாகும்.