ஆசாரிக் கறி சாப்பிட்டு இருக்கிறீர்களா? பயப்படாதீங்க, இது நரமாமிசமில்ல, சிம்பிளான சிக்கன் ரெசிப்பிதான!

  0
  6
  food

  பெயரை முதன் முதலில் கேட்கும் போது யாருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!இந்த ஆசாரிக் கறி, அல்லது ஆசாரி வறுவலுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று கொங்கு மண்டலத்து மக்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

  பெயரை முதன் முதலில் கேட்கும் போது யாருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!இந்த ஆசாரிக் கறி,அல்லது ஆசாரி வறுவலுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று கொங்கு மண்டலத்து மக்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

  இது தென் தமிழகத்தில் குறிப்பாக,மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம் பகுதியில் உப்புக்கறி என்று அழைக்கப்படுகிறது.இதன் சிறப்பு என்னவென்றால் வெறும் ஐந்தே ஐந்து பொருட்கள் போதும் இதைச்செய்ய! வாருங்கள்,ஆசாரிக்கறி அல்லது உப்புக்கறி செய்வோம்.

  தேவையான பொருட்கள்

  சிக்கன் 1 கிலோ
  சின்ன வெங்காயம் ¼ கிலோ
  காய்ந்த மிளகாய் 100 கிராம்
  எண்ணை ஒரு குழிக்கரண்டி
  உப்பு 

  அவளவு தான், கறியை சிறு துண்டுகளாக.வெட்டிக்கொள்ளுங்கள்.சின்ன வெங்காயத்தை உரித்து மட்டும் வையுங்கள்,வெட்டவே வேண்டாம்.காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி விதைகளை சுத்தமாக உதிர்த்துவிடுங்கள்.

  food

  இப்போது,அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து எண்ணை ஊற்றுங்கள்.எண்ணெய் சூடானதும்,முதலில் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு உப்புச்சேர்த்து வதக்குங்கள்.அது பாதி வெந்து வரும்போது விதைகளை உதிர்த்து வைத்திருக்கும் வற்றல் மிளகாயை போட்டு ஒரு ஐந்து நிமிடம் வதக்குங்கள்.இப்போது,சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அருகிலேயே இருந்து அவ்வப்போது கிளறி விடுங்கள்.

  food

  போதுமான அளவு உப்பு போட்டுக்கொண்டு கிளறி விடுங்கள். தண்ணீர் ஊற்றக்கூடாது. மஞ்சள்.தூளும் போடகூடாது.ஏனென்றால்,இதற்கு கொங்கு பகுதியில் ஆசாரிக்கறி என்று பெயர் இருப்பது போ, மதுரையில் உப்புக்கறி என்று அழைப்பது போல,ராமநாதபுரம் பகுதியில் வெள்ளைக்கறி என்றொரு பெயரும் இருக்கிறது.அந்த பெயரை கெடுக்கக் கூடாது!

  பதினைந்திலிருந்து இருபது நிமிடத்தில் சிக்கன் வெந்துவிடும். கோழிக்கறியிலும் சின்ன வெங்காயத்திலும் இருக்கும் நீரே கறி வேகப் போதுமானது.நீர் சேர்க்காமல் பொறுமையாக வதக்குவதிலும்,மிளகாய் விதைகளை அகற்றுவதிலும்தான் இதன் சுவையின் ரகசியமே இருக்கிறது.

  food

  இது,வெறும் ரசம்,அல்லது காய்கறி ஏதும் சேர்க்காத சாம்பாருடன் சாப்பிட சரியான பக்கவாத்தியமாக இருக்கும்.கறி காலியானவுடன்,சமைத்த கடாயில் கொஞ்சம் சோற்றைப் போட்டு,புரட்டி தின்றால் அற்புதமான சுவையாக இருக்கும்,அதுவே உங்களை அடுத்த முறை ஆசாரிக்கறி செய்ய வைக்கும்.