அ.தி.மு.க vs தி.மு.க கைப்பற்ற போகும் தொகுதிகள் எவை? தனியார் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு!?

  0
  3
  அதிமுக மற்றும் திமுக

  பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக மற்றும் திமுக கைப்பற்றவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

  சென்னை:  பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக மற்றும் திமுக கைப்பற்றவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

  vote

  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி மக்களவைத் தேர்தல்  நேற்று மாலை  ஆறு மணியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக் கணிப்புகள் தவறானது என்று எதிர்க்கட்சியினர் கருத்து கூறி வந்தாலும். மக்கள்  இது போன்ற கருத்துக் கணிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  அந்த வகையில் பிரபல  தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய   தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் திமுக கைப்பற்ற உள்ள தொகுதிகளின் விவரங்களும், அதிமுக வெற்றி பெறவுள்ள  தொகுதிகள் என்னென்ன என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  தி.மு.க. வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்

   

  exit

   

  exit poll

  1. மத்திய சென்னை, 2. வடசென்னை, 3. கடலூர், 4. நாமக்கல், 5. ஸ்ரீபெரும்புதூர், 6. கள்ளக்குறிச்சி, 7. காஞ்சிபுரம், 8. பெரம்பலூர், 9. திருச்சி, 10. தஞ்சாவூர், 11. நாகை, 12. கரூர், 13. மயிலாடுதுறை, 14. ஈரோடு, 15. சிவகங்கை 

  அ.தி.மு.க. வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்

  pollpoll

  1. திருவள்ளூர் 2. கன்னியாகுமரி, 3. கிருஷ்ணகிரி, 4. சேலம், 5. அரக்கோணம், 6. விழுப்புரம், 7. ஆரணி, 8. பொள்ளாச்சி, 9. கோவை, 10. தேனி, 11. தர்மபுரி, 12. தென்சென்னை

  இழுபறி உள்ள தொகுதிகள்

  poll

  1.கன்னியாகுமரி, 2. அரக்கோணம், 3. விழுப்புரம், 4. ஆரணி, 5. சிதம்பரம், 6. கோவை, 7. ராமநாதபுரம், 8. தர்மபுரி, 9. மதுரை, 10. நாமக்கல், 11. திருவண்ணாமலை, 12. தென்சென்னை, 13. திருநெல்வேலி, 14. புதுச்சேரி  

  பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில்  திமுக கூட்டணியே பெரும்பான்மையைக் கைப்பற்றும் என்று கூறி வரும் நிலையில் வரும் 23 ஆம் தேதி தான் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரியவரும்.